Aug 30, 2025 - 06:15 PM -
0
கம்பளை நகரில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று (29) இனந்தொியாத சிலர் வர்த்தக நிலையத்தின் கூரையை உடைத்து உள்ளே இறங்கி அங்கிருந்த கைப்பேசிகளை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பெரும்பாலான கைப்பேசி்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
--