Aug 30, 2025 - 06:49 PM -
0
உத்தியோகப்பூர்வ ஜப்பான் விஜயத்தை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கான விஜயத்தை முன்னெடுத்துள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷெங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை (31) மற்றும் 1 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
இதில் பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
குறித்த விஜயத்தின் போது சீனா ஜனாதிபதி சீ ஜின்பிங் உள்ளிட்ட உயர் மட்டக்குழுக்களையும் இந்திய பிரதமர் சந்திக்கவுள்ளார்.
இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதியையும் இந்திய ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு மேலதிக வர்த்தக வரி விதித்துள்ள நிலையில், ரஷ்யா மற்றும் சீனா ஜனாதிபதியுடனான இந்திய பிரதமரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.