வடக்கு
181 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது!

Aug 30, 2025 - 06:55 PM -

0

181 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது!


செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (30) 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

 

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 38 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

 

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 47 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது,

 

இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதியுடன் 06 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 181 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை இதுவரையில் 197 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

|

--

Comments
0

MOST READ
01
02
03
04
05