செய்திகள்
UPDATE: கட்டுநாயக்கவிலிருந்து வௌியே அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர்

Aug 30, 2025 - 07:28 PM -

0

UPDATE: கட்டுநாயக்கவிலிருந்து வௌியே அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர்

UPDATE: கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்ட கெஹல்பத்தர பத்மே உட்பட பாதாள உலகக் குழு தலைவர்கள் ஐவரும், சற்றுமுன்பு கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். 

அவர்கள் கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

 

……………

 

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 

சில மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தனர். 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திரணக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனை கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். 

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் விசேட பொலிஸ் குழுவும் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05