செய்திகள்
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழு தொடர்பில் விரிவான விசாரணை

Aug 30, 2025 - 10:31 PM -

0

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழு தொடர்பில் விரிவான விசாரணை

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகங்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இந்த நாட்டில் நீண்ட காலமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். 

பாதாள உலகக் குழு குற்றங்கள் இந்த நாட்டு மக்களை தொடர்ந்து துன்புறுத்த அனுமதிக்கப்படாது என்றும், அதை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ