Aug 30, 2025 - 10:54 PM -
0
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.