Aug 31, 2025 - 11:15 AM -
0
தவலந்தென்ன கொத்மலை பிரதேசத்தில் உள்ள புனித மரியாள் தேவாலயம் இன்று (31) திறந்து வைக்கப்பட்டது.
தவலந்தென்ன, கொத்மலை புனித மரியாள் தேவாலய பங்கு தந்தை கிளைமன் ஜேசுதாசன் தலைமையில் பிரதம அதிதியாக கண்டி மறை மாவட்ட வேலன்ஸ் மென்டிஸ் அவர்களினால் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பங்கு தந்தையர்கள் மற்றும் பிரதேச மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
--