கிழக்கு
அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்!

Aug 31, 2025 - 11:43 AM -

0

அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சிபார்சின் பேரில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொண்டு வரும் ரிதிதென்ன மில்கோ பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகளை, நேற்று (30) நேரில் சென்று பார்வையிட்டார். 

பல கோடி ரூபாய் செலவில் காபட் வீதியாக மேம்படுத்தப்பட்டுள்ள இவ்வீதியின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. 

இதன் மூலம் அந்தப் பிரதேசத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாக நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்விஜயத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர்களுடன் கலந்துரையாடினார். 

வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹிர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தில், ரிதிதென்ன ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் பைறுஸ் மௌலவி, சனசமூக நிலைய தலைவர் ரபீக், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். 

இதன்போது பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விற்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05