Aug 31, 2025 - 12:51 PM -
0
செம்மணி மனித புதைபுழி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (29) ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்களின் கையெழுத்து பெறும் போராட்டம் இன்று யாழ்.பாஷையூர் பொதுச்சந்தைப்பகுதியில் இடம்பெற்றது.
இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தை சேர்ந்த சுரேன் குருசாமி, யாழ். மாநகர சபை உறுப்பினர் து.ஈசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
--