Aug 31, 2025 - 01:29 PM -
0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (31) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு 10 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கபட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--