செய்திகள்
இலஞ்சம் பெற முயன்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது

Aug 31, 2025 - 03:31 PM -

0

இலஞ்சம் பெற முயன்ற மதுவரித் திணைக்கள  அதிகாரிகள் கைது

இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், குற்றப்புலனாய்வு திணைகளத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இது குறித்து மேலும் தெரியவருகையில்,  

நேற்று (30) மாதகல் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் முயற்சித்தனர். 

பின்னர் அவரை கைது செய்யாமல் விடுவதற்காக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது 

இந்நிலையில், போதைப் பொருளை வைத்திருந்தவர் 20 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்குவதற்கு இணங்கியுள்ளார். 

இந்நிலையில் அவர்கள் சந்தேகநபரை கைது செய்யாமல் விட்டு, இலஞ்சமாக கோரிய தொகையினை சித்தங்கேணி பகுதியில் உள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்திற்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதான அதிகாரிகள் மூவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05