வடக்கு
அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள்!

Aug 31, 2025 - 03:42 PM -

0

அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள்!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளமையை அடுத்து அவற்றை துண்டுகளாக உடைத்து அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகள் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய மீனவர்களின் 124 படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நீண்ட காலமாக தரித்து வைக்கப்பட்டிருந்தன. 

இவ்வாறு தரித்து நின்ற படகுகளுக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றில் 07 படகுகளை இந்திய மீனவர்களுக்கு திருப்பி வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது அதை அடுத்து படகுகளின் உரிமையாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடந்த 25 ஆம் திகதி வந்து தமது படகுகளைப் பார்வையிட்டனர். 

இவற்றில் 33 படகுகள் அரசுடமையாக்கப்பட்டதை அடுத்து அவை துண்டுகளாக உடைக்கப்பட்டு அச்சு வேலி கைத்தொழில் பேட்டைக்கு ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எஞ்சிய படகுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றில் இடம் பெற்று வருகின்றன. 

நாளை (01) குறித்த துறைமுகத்தில் ஜனாதிபதியினால் மூன்றாம் கட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05