Aug 31, 2025 - 04:02 PM -
0
கேரளா கிரிக்கெட் லீக் 2025 இருபதுக்கு 20 தொடர் அம்மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று (31) நடைபெற்ற 19-ஆவது லீக் ஆட்டத்தில் அதானி திருவனந்தபுரம் ரோயல்ஸ் - கோலிகட் குளோப்ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற திருவனந்தபுரம் முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய கோலிகட் குளோப் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை குவித்தது.
அதிகபட்சமாக சல்மான் நிசார் 86 ஓட்டங்களை அடித்தார்.
அந்த ஓவரின் முதல் பந்தை சல்மான் சிக்சருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தை பிரவின் அகல பந்தாக (வைட்) வீசினார்.
அதற்காக வீசிய மறு பந்தில் நோபால் போட்டார். அதில் 2 ஓட்டங்கள் எடுத்த சல்மான் நிசார் அதற்கடுத்த பந்தில் சிக்சர் பறக்க விட்டார்.
இதனால் முதல் 2 பந்துகளிலேயே 2 சிக்சர் உட்பட 16 ஓட்டங்கள் கோலிகட் குளோப் ஸ்டார்ஸ் அணிக்கு கிடைத்துவிட்டது.
அதற்கு அடுத்து வீசப்பட்ட 4 பந்துகளையும் எதிர்கொண்ட சல்மான் நிசார் தொடர்ச்சியாக சிக்சருக்கு விளாசினார்.
இதனையும் சேர்த்து கடைசி ஓவரில் மட்டும் கோலிகட் குளோப் ஸ்டார்ஸ் அணிக்கு 40 ஓட்டங்கள் கிடைத்தது.
கடைசி ஓவரில் எடுக்கப்பட்ட ஓட்டங்கள் விவரம்:
6 சிக்சர்கள் - 36 ஓட்டங்கள்
ஒரு வைட் - ஒரு ஓட்டம்
ஒரு நோபால் - ஒரு ஓட்டம் + நோபாலில் ஒடி எடுக்கப்பட்ட 2 ஓட்டங்கள்
இந்த போட்டியில் மொத்தம் 26 பந்துகளை எதிர்கொண்ட சல்மான் நிசார் 86 ஓட்டங்களை விளாசி அபார பினிஷிங் கொடுத்தார்.
குறிப்பாக கடைசி 12 பந்துகளில் 11 சிக்சர்களை அடித்து அதிரடியில் மிரள வைத்தார்.
அடுத்து விளையாடிய அதானி திருவனந்தபுரம் ரோயல்சை 19.3 ஓவரில் 173 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் வீழ்த்திய கோலிகட் குளோப்ஸ்டார்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.