Aug 31, 2025 - 06:14 PM -
0
2009 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி (SMS).
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சந்தானம் நடித்திருந்தார்.
இப்படம் வெற்றிபெற முக்கிய காரணங்களில் ஒன்று சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுயா, ஊர்வசி, ஞானசம்பந்தன், சத்யன், மகாநதி ஷங்கர் என பலரும் நடித்திருந்தனர். மேலும் ஆர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இப்படம் இன்று (31) உடன் வெளிவந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில், 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆனால், இப்படத்தில் சந்தானம் மற்றும் அனுயா நடிக்கிறார்களா என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.