சினிமா
38 வயதில் காலமான பிரபல நடிகை!

Aug 31, 2025 - 08:20 PM -

0

38 வயதில் காலமான பிரபல நடிகை!

ஹிந்தி மற்றும் மராத்தி சீரியல்களில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியா மராத்தே 38 வயதில் காலமாகியமை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

 

அவரது Pavitra Rishta உள்ளிட்ட பல சீரியல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை. சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி ஸ்டாண்டப் காமெடியிலும் அவர் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

 

2023இல் அவர் உடல்நலம் பாதித்த நிலையில் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்த நிலையில் அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

 

இன்று (31) மும்பையில் அவரது வீட்டில் அவர் உயிரிழந்துள்ளார். 38 வயதில் நடிகையின் மரணம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.  

 

பிரியா மராத்தேவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05