வணிகம்
மஹிந்ரா இலங்கையில் அறிமுகப்படுத்தும் XUV 3XO கச்சிதமான SUV வகையின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கிறது

Sep 1, 2025 - 10:34 AM -

0

மஹிந்ரா இலங்கையில் அறிமுகப்படுத்தும் XUV 3XO கச்சிதமான SUV வகையின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கிறது

3XO என்ற மிகவும் எடுப்பான தனது SUV வாகன வகையை மஹிந்ரா இன்று இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப சிறம்பங்கள் நிறைந்த வடிவங்களான MX3, AX5 மற்றும் AX7L ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் XUV 3XO ஆனது வெறும் ரூபா 10.49 என்ற ஆரம்ப விலையில் தனித்துவமான வடிவமைப்பு, வியப்பூட்டும் தொழில்நுட்பம், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு, உற்சாகமூட்டும் செயல்திறன் ஆகியவற்றை வழங்குகின்றது. 

இலங்கையில் மஹிந்ராவின் அடித்தடம் வளர்ச்சி கண்டுவருவதை அத்திவாரமாகக் கொண்டு XUV 3XO அறிமுகமாகியுள்ளதுடன், எதிலும் சிறந்தவற்றை நாடுகின்ற இலங்கை வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட அசல் SUV வாகனங்களை வழங்கும் அதன் மூலோபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. 

ஒப்பற்ற விலையில், அதன் செயல்திறன் மற்றும் உயர்ரக தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் புதிய தரஒப்பீட்டு நியமத்தை XUV 3XO நிலைநாட்டுகிறது. மஹிந்ராவின் வலுவான வர்த்தகநாம மதிப்பு, உறுதியான வாடிக்கையாளர் நம்பிக்கை, மற்றும் அதன் புதிய யுகத்து SUV வாகனங்களுக்கான மவுசு ஆகியவற்றை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. 

இலங்கை புவியியல் அமைப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன 

கொழும்பிலுள்ள பரபரப்பான வீதிகளானாலும் சரி, அழகிய காட்சிகள் நிறைந்த கரையோரப் பிரதேசங்களுக்கான சவாரிகளானாலும் சரி, அல்லது மலைநாட்டுக்குப் பயணிப்பதனாலும் சரி, இலங்கையின் பல்வேறுபட்ட புவியியல் சூழல்களையும் கையாளும் வகையில் XUV 3XO வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மஹிந்ராவின் சர்வதேச வடிவமைப்பு ஸ்டூடியோவில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், வலிமை மற்றும் நேர்த்தி ஆகிவற்றிற்கிடையில் சிறந்த சமநிலையைக் கொண்டுள்ளது. தரை மட்டத்திற்கும் அடிப்பாகத்திற்கு இடையில் உயர்ந்த இடைவெளியைக் (ground clearance) கொண்டுள்ள 3XO ஆனது இலங்கையின் பல்வேறுபட்ட புவியியல் சூழல்களில் சாகசங்களைக் கையாள்வதுடன், நகர்ப்புற பிரதேசங்களில் பயணிப்பதற்கான ஆற்றலையும் கொண்டுள்ளது. 

மஹிந்ரா அன்ட் மஹிந்ரா லிமிட்டெட் நிறுவனத்தின் மோட்டார் வாகனங்களுக்கான சர்வதேச செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரி சச்சின் ஆரோல்கர் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச விஸ்தரிப்பிற்கான எமது திட்டங்களில் மிக முக்கியமானதொரு சந்தையாக இலங்கை காணப்படுவதுடன், இலங்கை நுகர்வோரின் அபிலாஷைகளை சிறப்பாக எதிரொலிக்கின்ற அசல், உலகத்தரம் வாய்ந்த SUV வாகனத்தை வழங்குவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை XUV 3XO ன் அறிமுகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உற்சாகமூட்டும் செயல்திறன், அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பம், மற்றும் மகத்தான மதிப்பு ஆகியவற்றுடன், XUV 3XO ஆனது இலங்கையில் எமது பிரச்சன்னத்தை வலுப்படுத்தி, உறுதியான விளைவை ஏற்படுத்தத் தலைப்பட்டுள்ளது. 

ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. நளின் வெல்கம அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “புத்தாக்கம், வடிவமைப்பு, மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் துணிச்சலான முன்னேற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வாகனம் என்ற ரீதியில், மஹிந்ரா தனது புதிய Mahindra XUV 3XO வாகனத்தை அறிமுகம் செய்து வைப்பது எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து தீர்வுகளை கொண்டு வருவதில் எமக்கிடையில் பகிரப்பட்டுள்ள குறிக்கோளை மீண்டும் உறுதிப்படுத்தியவாறு, மஹிந்ராவுடன் நாம் பேணி வருகின்ற நீண்ட கால கூட்டாண்மையில் இந்த அறிமுகமானது மற்றுமொரு சாதனை இலக்காக மாறியுள்ளது. மஹிந்ராவின் வடிவமைப்பு முகத்துவம் மற்றும் பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற நுகர்வோரின் தேவைகளை ஆழமாக புரிந்து கொள்ளல் ஆகியவற்றுக்கு XUV 3XO சான்று பகருகின்றது. இத்தகைய அதிநவீன வாகனங்களை இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்து வைப்பதில் முன்னிலை வகிப்பதையிட்டு ஐடியல் மோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் மிகவும் பெருமை கொள்வதுடன், வலிமைமிக்க இந்த SUV வாகனம் இப்பிரிவில் புதிய தரஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டும் என உறுதியாக நம்புகின்றோம்.” 

உத்தரவாதம், பராமரிப்புச் சேவைத் திட்டம், விலை, மற்றும் கிடைக்கப்பெறல் 

வடிவம் - சில்லறை விலை

XUV 3XO MX3 ரூபா. XX மில்லியன்*
XUV 3XO AX5 ரூபா. XX மில்லியன்*
XUV 3XO AX7L ரூபா. XX மில்லியன்*


- 5-வருடம் / 150,000 கிமீ தொழிற்சாலை உத்தரவாதம் 

- கூடுதல் விபரங்களுக்கு அல்லது பரீட்சார்த்த ஓட்டம் ஒன்றுக்கு நியமனத்தை மேற்கொள்வதற்கு தயவு செய்து பின்வரும் இணையப்பக்கத்தைப் பார்க்கவும் - www.mahindrasrilanka.lk 

*வற் மற்றும் தற்போதைய வரிகளை விலை உள்ளடக்கியுள்ளது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 

இலங்கையில் போக்குவரத்தின் எதிர்காலத்தைச் செதுக்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள ஐடியல் மோட்டர்ஸ், நவீன தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தல், நிலைபேற்றியல் சார்ந்த தீர்வுகளை முன்னெடுத்தல், மற்றும் ஒப்பற்ற வாடிக்கையாளர்கள் அனுபவங்களை வழங்குதல் ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளது. 

Mahindra XUV 3XO குறித்த கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள: 

வர்த்தகநாம இணையப்பக்கம்: https://www.mahindrasrilanka.lk 

முகநூல்: https://www.facebook.com/MahindraSriLanka 

இன்ஸ்டாகிராம்: @MahindraSriLanka

Comments
0

MOST READ
01
02
03
04
05