வணிகம்
VIMAN ஜா–எல குடியிருப்புத் திட்டத்திற்கு விஜயம் செய்வதை இலகுபடுத்த John Keells Properties நிறுவனம் PickMe உடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியது

Sep 1, 2025 - 10:39 AM -

0

VIMAN ஜா–எல குடியிருப்புத் திட்டத்திற்கு விஜயம் செய்வதை இலகுபடுத்த John Keells Properties நிறுவனம் PickMe உடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியது

John Keells Properties நிறுவனம் தனது சமீபத்திய குடியிருப்புத் திட்டமான VIMAN ஜா–எல தொடர்மாடிக் குடியிருப்பின் வாடிக்கையாளர்களாக மாறவிருப்பவர்களுக்கு இலகுவான மற்றும் சௌகரியமான போக்குவரத்துத் தீர்வை வழங்கும் நோக்கில் PickMe நிறுவனத்துடன் மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. ‘புதிய உலகத்தை உருவாக்குதல்’ என்ற நிறுவனத்தின் நோக்கத்திற்கு இணங்கும் வகையில் அமைந்துள்ள இந்தக் கூட்டாண்மையானது எதிர்கால வாடிக்கையாளர்களுக்குப் போக்குவரத்துத் தீர்வை ஏற்படுத்திக் கொடுத்து ஆதனத் தேடல் செயன்முறையை நெறிப்படுத்துவதன் ஊடாக சிறந்த அனுபவத்தை வழங்குகின்றது. 

இந்தக் கூட்டமைண்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்த John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group இன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் குறிப்பிடுகையில், “ரியல் எஸ்டேட் துறையை மாற்றுவதில் முன்னோடிகள் என்ற ரீதியில் VIMAN ஜா–எல தொடர்மாடிக் குடியிருப்புத் திட்டத்தின் வாடிக்கையாளர்களாக மாறவிருப்பவர்களுக்கு இலகுவான மற்றும் சௌகரியமான போக்குவரத்துத் தீர்வுகளை வழங்க போக்குவரத்துத் துறையை மாற்றுவதில் ஈடுபட்டுள்ள நிறுவனமான PickMe உடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். VIMAN ஜா–எல தொடர்மாடிக் குடியிருப்பில் குடிமனைகளை வாங்குவதன் அனுபவத்தை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை இந்தக் கூட்டாண்மை வெளிப்படுத்துகின்றது. VIMAN ஜா–எல மீது முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்கள் கொழும்பிலுள்ள VIMAN விற்பனைக் காரியாலத்திற்கும் அல்லது ஜா-எலவிலுள்ள செயற்திட்ட அலுவலகத்திற்கும் இலவசமாகப் பயணிக்க முடியும்” என்றார். 

இந்தக் கூட்டாண்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்த PickMe நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜிஃப்றி சுல்ஃபர் “புரட்சிகரமான புதிய குடியிருப்புத் திட்டமான VIMAN ஜா–எல தொடர்மாடித் திட்டத்தில் காணப்படும் வசதிகளுக்கான தடையற்ற அணுகலை வழங்குவதற்காக John Keells Properties நிறுவனத்துடன் கூட்டாண்மை ஏற்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். சௌகரியமான போக்குவரத்துத் தீர்வுகளை PickMe ஊடாக வழங்க நாம் உறுதியாக இருப்பதுடன், எதிர்கால வீட்டு உரிமையாளர்களுக்குப் பிரதான தடையாக இருக்கும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தக் கூட்டாண்மை உறுதுணையாக இருக்கும். இந்த முயற்சியின் மூலம் ஆர்வமுள்ள எதிர்கால வீட்டு உரிமையாளர்கள் கொழும்பில் உள்ள VIMAN ஜா–எல மாதிரி வீட்டுத் திட்டத்தைப் பார்வையிடுவதற்கு சிரமமின்றிப் பயணம் செய்ய முடியும் என்பதுடன், நிறுவனத்தின் அணியினரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் ஊடாக அவர்களின் வீடு வாங்கும் நடைமுறை சுமுகமாக அமையும்” என்றார். 

இந்தக் கூட்டாண்மையின் ஊடாக வீட்டு உரிமையாளர்களுக்கான வழி எளிதாக்கப்படுவது மட்டுமல்ல சொந்தமாக வீட்டை வாங்க வேண்டும் எனக் கனவைக் கொண்ட நபர்களுக்கான வளமான அனுபவத்தையும் John Keells Properties மற்றும் PickMe நிறுவனங்கள் எளிதாக்குகின்றன. VIMAN ஜா–எல திட்டம் மற்றும் அது தொடர்பில் காணப்படும் நிதித் தெரிவுகள் குறித்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 0706 068 068 என்ற தொலைபேசி இலக்கத்தில் John Keells Properties நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். 

John Keells Properties நிறுவனத்தின் VIMAN திட்டம் 

‘புதிய உலகை உருவாக்குதல்’ என்ற John Keells Properties இன் நோக்கத்திற்கு அமைய ஆறு ஏக்கர் விஸ்தீரணத்தில் 65% திறந்த வெளியைக் கொண்ட, நன்கு வடிவமைக்கப்பட்ட 418 தொடர்மாடிகளைக் கொண்ட புதிய வாழ்க்கைத் தரத்தை வழங்கும் திட்டமாக VIMAN ஜா–எல அமைந்துள்ளது. ஜா-எல நகரின் பிரதான இடத்தில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்புத் தொகுதி, பேரங்காடிகள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை இலகுவில் அணுகக் கூடிய வசதியைக் கொண்டுள்ளது. கொழும்பு துறைமுக அணுலுக்கான அதிவேகநெடுஞ்சாலைக்கு தொடர்பை வழங்குவதுடன், கொழும்பிற்கும் ஜாஎலவிற்கும் இடையிலான தூரத்தை 30 நிமிடங்களில் அடைவதை இது உறுதிப்படுத்துகின்றது. பசுமை மிக்க மத்திய தோட்டப்பகுதி, தியான கூடம், வெளிப்புற விளையாட்டு இடம், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம் உள்ளிட்ட 15 விசேட அம்சங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. நிலைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, VIMAN ஜா–எல ஆற்றல் திறன் கொண்ட, சூரிய சக்தியில் இயங்கும் வீடுகள் மற்றும் ஏராளமான பசுமையான இடங்களை இணைத்து, நவீன வசதிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை முன்னுரிமைப்படுத்தும் அதே வேளையில், வலுவான சமூக உணர்வை வளர்க்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05