Sep 1, 2025 - 04:06 PM -
0
பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள தேவி பாலிகா சுற்றுவட்டத்திலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையிலான கொழும்பு நுழைவு வீதியில் இன்று (01) மாலை 7:00 மணி முதல் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முழுமையாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அந்த வீதியில் விரிசல் ஏற்பட்டு தாழிறங்கியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.