வடக்கு
மன்னாரில் 30 ஆவது நாள் போராட்டம்

Sep 1, 2025 - 04:11 PM -

0

மன்னாரில் 30 ஆவது நாள் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (01) 30 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கற் கடந்த குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர். 

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டம் இன்று 30 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கற்கடந்த குளம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும்,நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு, அரசே எமது உயிரோடு விளையாடதே, காற்றாலை அமைத்து எமது குலகடுவருக்காதே, சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதனை தொடர்ந்து மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05