Sep 1, 2025 - 04:24 PM -
0
இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மத்தியில் அவர்கள் இசுசு (Isuzu) வாகனங்களை கொள்வனவு செய்யும்போது பெறுமதி, நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதி ஆகியவை இணைந்த சக்திவாய்ந்த சலுகையை வழங்க கொமர்ஷல் வங்கி மற்றும் சதொச மோட்டார்ஸ் பிஎல்சி இடையேயான ஒரு புதிய கூட்டு முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டு முயற்சியானது கவர்ச்சிகரமான லீசிங் விதிமுறைகள் மற்றும் பிரத்தியேக வாகன சலுகைகள் மூலம் இசுசு டிரக்குகள் மற்றும் கேப்களை பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட நாடாளாவியரீதியிலான ஊக்குவிப்பினை அறிமுகப்படுத்துகிறது.
2026 மார்ச் 31,வரை நடைபெறவுள்ள இந்த ஊக்குவிப்பு பிரசாரமானது, வாகன கையகப்படுத்துதலின் நிதிச் சுமையைக் குறைப்பதன் மூலம் இயக்கம் மற்றும் வர்த்தக வளர்ச்சியை ஆதரிப்பதற்கான கூட்டு உறுதிப்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், சதொச மோட்டார்ஸ் இசுசு லாரிகளுக்கு ரூ.50,000 விலைக்கழிவினையும், இசுசு டாக்ஸிகளுக்கு ரூ.100,000 விலைக்கழிவினையும், தொழிலாளர் மற்றும் பொருள் செலவுகளை உள்ளடக்கிய மூன்று இலவச சேவைகளையும் வழங்கவுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், தனது நாடாளாவியரீதியிலான கிளை வலையமைப்பின் மூலம் தனித்துவமான லீசிங் திட்டங்களை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்கள் போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளதுடன் மேலும் வாடிக்கையாளர்கள் தமது பணப்புழக்கத்திற்கு ஏற்ப தமது மீளச் செலுத்துதல்களை கட்டமைக்க அனுமதிக்கின்றன. இது சிறிய வர்த்தகங்கள் மற்றும் தனிப்பட்ட கொள்வனவாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நெகிழ்வான அணுகுமுறை என்று வங்கி தெரிவித்துள்ளது.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.