உலகம்
ஆப்கான் மக்களுக்கு உடனடி உதவி வழங்க ஐ.நா நடவடிக்கை

Sep 1, 2025 - 05:54 PM -

0

ஆப்கான் மக்களுக்கு உடனடி உதவி வழங்க ஐ.நா நடவடிக்கை

ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடியான மனிதாபிபமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

அதன் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் எக்‌ஸ் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளதோடு, 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இந்தவிடயம் தொடர்பில் பதிவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமது இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்த சந்தர்ப்பத்தில் ஆப்கான் மக்களுக்காக தாம் முழுமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். 

ஆப்கானிஸ்தானில் குழு ஒன்று திரட்டப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என க்கிய நாடுகள் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05