உலகம்
புதிய வியூகத்துடன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த திட்டம்!

Sep 2, 2025 - 10:59 AM -

0

புதிய வியூகத்துடன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த திட்டம்!

ரஷ்யா மீது புதிய வியூகத்துடன் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக  உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

 

உக்ரைனின் போர்க்கப்பல் மீது சமீபத்தில் ரஷ்யாவின் ஆளில்லா உளவு விமானங்கள் தாக்குதல் நடத்தி அதனை அழித்தது.

 

இந்த சூழலில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

 

உக்ரைன் ரஷ்யாவுக்குள், குறிப்பாக மாஸ்கோ மற்றும் கிரெம்ளின் ஆகிய பகுதிகளில், தாக்குதல் நடத்தும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

இது போர் உக்ரைன் மண்ணில் மட்டும் அல்ல, ரஷ்யாவிற்குள்ளும் நடக்கும் என்பதை வெளிப்படுத்த உக்ரைன் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

ரஷ்யாவின் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள், மற்றும் உள்கட்டமைப்பைத் தாக்குவதன் மூலம் ரஷ்யாவின் போர் திறனை பலவீனப்படுத்துவது உக்ரைனின் முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.

 

உக்ரைன், ரஷ்யாவிற்குள் தாக்குதல்களை நடத்துவது இது முதல் முறையல்ல. ஆனால், இந்த அறிவிப்பு உக்ரைனின் புதிய போர் உத்தியை வெளிப்படையாக உறுதிப்படுத்துகிறது என்று சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 

ரஷ்யாவின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்துவதன் மூலம், உக்ரைன் போர் தனது நாட்டிற்குள்ளேயே மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும், ரஷ்யாவின் பொதுமக்கள் மற்றும் இராணுவத் தளபதிகள் மீதும் அதன் தாக்கம் இருக்கும் என்பதையும் உணர்த்த முயற்சிக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

 

ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பு, ரஷ்யா மேலும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை எடுக்க வழிவகுக்கலாம். இதனால், போர் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05