விளையாட்டு
உலக சாதனையை முறியடித்த UAE அணியின் தலைவர்

Sep 2, 2025 - 12:15 PM -

0

உலக சாதனையை முறியடித்த UAE அணியின் தலைவர்

ஐக்கிய அரபு எமிரேட்சில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகிறது. ஒரு அணி மற்ற அணியுடன் 2 முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.

 

இந்நிலையில் நேற்று (01) 3 ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்த போட்டியில் எமிரேட்ஸ் அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியின் தலைவர் வசீம் பல மகத்தான சாதனைகளை படைத்துள்ளார்.

 

இந்த போட்டியில் வசீம் 37 பந்துகளில் 67 ஓட்டங்களை எடுத்தார். இதில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகளை பறக்க விட்டார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அணி தலைவராக அதிக சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மாவை (105 சிக்சர்) பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலில் வசீம் (110 சிக்சர்) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

 

டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக எந்த ஒரு வீரரும் 90 சிக்சர்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

80 டி20 போட்டிகளில் விளையாடிய வசீம், 156.31 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,859 ஓட்டங்களை எடுத்துள்ளார் (சராசரி 38.12). இதில் 3 சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் அடங்கும். வேறு எந்த யுஏஇ துடுப்பாட்டத்திலும் டி20யில் 1,300 ஓட்டங்கள் கூட எடுக்கவில்லை.

 

மேலும் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை (173 சிக்சர்கள்) வசீம் (174 சிக்சர்கள்) பின்னுக்கு தள்ளி 2 ஆவது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 

 

தற்போதைய நிலவரப்படி, டி20 போட்டிகளில் 150 இற்கும் மேற்பட்ட சிக்சர்களை (160) அடித்த மற்றொரு வீரர் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05