Header Logo

இந்தியா
மேடையில் நடனமாடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Sep 2, 2025 - 02:40 PM -

0

மேடையில் நடனமாடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடமாடிய நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று கேரளாவில் பதிவாகியுள்ளது. 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பத்தேரியைச் சேர்ந்தவர் ஜுனைஸ் அப்துல்லா. இவருக்கு வயது 46. இவர் முன்னாள் எம்.எல்.ஏ பி.வி. அன்வரின் உதவியாளராக வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகை ஓகஸ்ட் 26 ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 5 திகதி வரை சுமார் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

அந்த வகையில், திருவனந்தபுரத்தில் கேரள சட்டமன்றத்தால் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

அப்போது அரசு ஊழியர்கள் கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து மேடையில் சுமார் 10 பேர் நடனமாடினர். 

அதில்,முன்னாள் எம்.எல்.ஏ பி.வி. அன்வரின் முன்னாள் உதவியாளருமான ஜுனைஸ் அப்துல்லாவும் நடனமாடினார். அப்போது சக ஊழியர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது ஜுனைஸ் அப்துல்லா மயங்கி விழுந்துள்ளார். 

மேலும் சிறிது நேரத்தில் எழுந்துவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எழவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந் த சக ஊழியர்கள் அவரை மீட்டு உடனடியாக திருவனந்தப்புரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு ஜுனைஸ் அப்துல்லாவிலை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் கதறிய அழுதனர். 

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவனந்தபுரம் பொலிஸார் ஜுனைஸ் அப்துல்லா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைகாக அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இச்சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் வெளியாகி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title