Sep 2, 2025 - 03:51 PM -
0
இயக்குனராக பல ஹிட் படங்கள் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகராகவும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் லோகேஷ் தற்போது ஹீரோவாக ஒரு படம் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'நான் அனிருத் இல்லாமல் படம் பண்ண மாட்டேன்' என கூறி இருக்கிறார்.
'ஒருவேளை எங்கள் இரண்டு பேரில் ஒருவர் சினிமாவில் இருந்து விலகினால் அதன் பிறகு பார்க்கலாம்' என கூறி இருக்கிறார்.
அதனால் லோகேஷின் அடுத்தடுத்த படங்களுக்கும் அவர் தான் இசைமைப்பாளர் என்பது உறுதியாகி இருக்கிறது.

