Sep 3, 2025 - 08:25 AM -
0
தங்கம் கடத்திய நிலையில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு இந்திய வருவாய் புலனாய்வுத்துறை 102 கோடி ரூபாய் (350 கோடி இலங்கை ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டார்.
இவர் இதுபோன்று பலமுறை தங்கம் கடத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இவருடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது வளர்ப்பு தந்தை டிஜிபி ரேங்கில் இருந்தவர். இவரை பெயரை பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் கே. ராமச்சந்திர ராவ் என்ற அவரது தந்தை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் வருவாய் புலனாய்வுத்துறை ரன்யா ராவுக்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அபராதம் செலுத்தாவிட்டால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ரன்யா ராவ் உடன், மேலும் 3 பேருக்கு 50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்த வழக்கில் கைதாகி ரன்யா ராவ் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.