செய்திகள்
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது

Sep 3, 2025 - 08:50 AM -

0

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது

மீட்டியாகொட மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

நேற்று முன்தினம் (01) மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் மலவென்ன வீதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவியவராகக் கருதப்படும் நபர் ஒருவர், நேற்று மாலை தலவாக்கலை பொலிஸ் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். 

 

அவர் லிந்துலையைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

 

அதேபோல், ஓகஸ்ட் 21 அன்று பண்டாரகம பொலிஸ் பிரிவின் பொல்கொட பாலத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உடந்தையாக இருந்த 23 வயது நபர் ஒருவர், பாணந்துறை ஹிரண பகுதியில் களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05