Header Logo

இந்தியா
பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம்...! வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Sep 3, 2025 - 09:07 AM -

0

பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம்...! வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக அவள் வயிற்று வலியால் அவதிப்பட்டதால், அவளது தாய் அவளை பிரியப்பட்டணா அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். 

அங்கு வைத்தியர்கள் அவளைப் பரிசோதித்தபோது, அவள் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. 

இதனால் வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து அவளது தாயிடம் தெரிவித்தனர். 

அதைக் கேட்டு அவளது தாய் அதிர்ச்சியடைந்து அழுதார்.பின்னர், வைத்தியர்களும் அவளது தாயும் சிறுமியிடம் விசாரித்தபோது, அவள் கண்ணீர் மல்க தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தாள்.

கடந்த ஒரு ஆண்டாக அவளது தந்தையே அவளை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதனால் வைத்தியர்களும் அவளது தாயும் ஆத்திரமடைந்தனர்.பின்னர், வைத்தியர்கள் இதுகுறித்து பெட்டதபுரா பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். 

பொலிஸார் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தி, அவளது தந்தையை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title