Sep 3, 2025 - 11:09 AM -
0
புதிதாக பிறந்த 2 பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு வைத்திய கல்லூரி வைத்தியசாலை ஒன்று அமைந்துள்ளது.
மாநிலத்தின் மிகப்பெரிய வைத்தியசாலைகளில் ஒன்றான இங்கு எலித்தொல்லை அதிகரித்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தநிலையில் குழந்தைகள் நல வார்டில் புதிதாக பிறந்த 2 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன.
வைத்தியசாலையில் சிகிச்சையில் இருந்தபோது அந்த குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளை அங்கு சுற்றித்திரிந்த எலிகள் கடித்து குதறின.
இதனால் பச்சிளம் குழந்தைகள் வலியால் அலறி துடித்தன. காயம்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.