Sep 3, 2025 - 11:37 AM -
0
ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே SLADA ரேசிங் செம்பியன்ஷிப் 2025 ஆனது அதிகளவான கூட்டத்தினை ஈர்த்தும் இலங்கையின் ப்ரீமியர் மோட்டார் பந்தய பருவகாலத்திற்கான தொனியை கட்டமைத்தும் ரோதேர்ஹம் கட்டுகுருந்த சுற்றுப்போட்டி 1 இனை மயிர்க்கூச்செரியும் வகையில் நடாத்தி முடித்திருந்தது.
உத்தியோகப்பூர்வ அனுசரனையாளராக ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயானது சவால்மிக்க பல வருடங்களின் பின்னர் மோட்டார் பந்தய மீள்வருகைக்கான மைல்கல்லை பிரதிநிதித்துவப்படுத்திய இப்பெருமைமிகு தொடரினை மீளுயிர்ப்பதிலும் வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியிருந்தது. துடிப்பான துவக்கவிழாவானது போட்டிப்பந்தய சிறப்புக்களை மாத்திரமின்றி இலங்கையின் மோட்டார் பந்தயம் மற்றும் வாகன உதிரிப்பாக கைத்தொழிற்றுறைக்கு ஆதரவளிப்பதிலான ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயின் நீண்டகால அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்தியிருந்தது.
ரசிகர்கள் மறக்க முடியாத அதிவேக பந்தயத் தினமொன்றிற்கு சாட்சியானதுடன் இந்நிகழ்வில் அஷான் சில்வா - இலங்கையின் அதிக விருதுவென்ற ஓட்டுநரும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் வர்த்தகநாம தூதுவரும் - அவர்கள் 3500 CC வரையிலான SL-GT கார்களில் முக்கிய வெற்றியினை பெற்று போட்டியின் சிறந்த ஓட்டுநர் விருதினை வென்றிருந்தமை சிறப்பானதாகும்.
இப்போட்டியானது பல்வேறு வகைப்பாடுகளிலான சிறப்பான செயற்பாடுகளுடன் சிறந்த ரைடர் கிண்ண இளம் வெற்றியாளரான வரலாற்றில் தடம் பதித்த 14 வயது சேனுக கல்தெர அவர்களுடன் அடுத்த தலைமுறையின் எழுச்சியினையும் கொண்டாடியிருந்தது.
இந்நிகழ்வினில் உரையாற்றுகையில் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் இலங்கைக்கான தலைவர் திரு.வைத்தியலிங்கம் கிரிதரன் அவர்கள் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே SLADA ரேசிங் செம்பியன்ஷிப் 2025இன் தொடக்க விழாவிற்கு அத்தகைய அதிசிறப்பான வரவேற்பு கிடைத்தமையை முன்னிட்டு நாம் மகிழ்சியடைகின்றோம். இது மோட்டார் பந்தயம் என்பதற்கும் அப்பால் - திறன்களை வளப்படுத்துவதும், சமுதாயங்களை ஒன்றிணைப்பதும் மற்றும் இலங்கை மோட்டார் பந்தயத்தின் சாரத்தினை வலுப்படுத்துவதுமானவொன்றாகும். இப்பயணத்திற்கு அனுசரணை வழங்குவதற்கும் எம்மை ஆகர்சித்த அனைத்து வீரர்களுக்கும் ஆதரவளிப்பதற்குமாக ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது பெருமையடைகின்றது.
இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படையுடன் இணைந்து இலங்கை மோட்டார்பந்தய ஓட்டுநர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ரோதேர்ஹம் கட்டுக்குருந்த சுற்றுப்போட்டி 1 ஆனது இலங்கை மோட்டார் பந்தயத்தின் இதயத்துடிப்பு எனும் கட்டுக்குருந்தையின் புகழினை மீளவும் உறுதிப்படுத்தியது.
இத்தொடரானது கஜபா/SLADA சுபர்க்ரோஸ் என ஒகஸ்ட் 30-31 ஆம் திகதிகளில் சாலியபுரையில் தொடரவுள்ளதுடன் ஏசியன் பெயின்ட்ஸ் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே SLADA ரேசிங் செம்பியன்ஷிப் 2025 இல் உச்ச புகழிற்காக தேசத்தின் சிறப்பான போட்டியாளர்கள் போட்டியிடவுள்ளனர்.