வணிகம்
செலிங்கோ லைஃப் 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் ரூ. 22.45 பில்லியன் காப்புறுதி வருமானத்தை ஈட்டியுள்ளது

Sep 3, 2025 - 11:41 AM -

0

செலிங்கோ லைஃப் 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் ரூ. 22.45 பில்லியன் காப்புறுதி வருமானத்தை ஈட்டியுள்ளது

செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் மொத்த எழுதப்பட்ட காப்புறுதித் தொகையாக ரூ. 22.45 பில்லியனையும் மொத்த வருமானமாக ரூ. 36.49 பில்லியனையும் ஈட்டியுள்ளது. 

2025 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான காப்புறுதி வருமானமானது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் முதலீடு மற்றும் பிற வருமானம் ரூ. 14.04 பில்லியனாக உள்ளது, இதன் விளைவாக ஒருங்கிணைந்த வருமானம் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நிறுவனத்தின் நிதியியல் நிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி மொத்த சொத்துக்கள் ரூ. 266.38 பில்லியனை எட்டியுள்ளன, இது ஆறு மாதங்களில் 5.9 சதவீதம் அல்லது ரூ. 14.94 பில்லியன் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது, இது மாதத்திற்கு சராசரியாக ரூ. 2.5 பில்லியனாகும். நிறுவனத்தின் முதலீட்டுத் தொகுதியானது இந்தக் காலகட்டத்தில் 6.77 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 237.5 பில்லியனாகவும், ஆயுள் நிதியம் 7.6 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 194.7 பில்லியனாகவும் உள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ரூ. 13.8 பில்லியனாக அதிகரித்துள்ளது. 

இந்த ஆண்டின் முதலாவது அரையாண்டில் எமது நிதியியல் பெறுபேறுகள், எமது பிரதான வர்த்தகமான பாதுகாப்புக்கு நாம் அளிக்கும் அசைக்க முடியாத முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது, காப்புறுதி வருமானமானது வருமான வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கிறது, என்று செலிங்கோ லைஃப் நிறைவேற்றுத் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் குறிப்பிட்டார். 'ஆயுள் காப்புறுதி வர்த்தகத்தின் வளர்ச்சியானது, 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மிகப்பாரிய ஆயுள் காப்புறுதியாளராக செலிங்கோ லைஃப் தொடர்ந்து இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, நாம் இரண்டாவது இடத்தில் உள்ள ஆயுள் காப்புறுதி நிறுவனத்தை விட ரூ. 3.72 பில்லியனுக்கும் அதிகமான வித்தியாசத்தில், உள்ளோம நாம் பாதுகாக்கும் மில்லியன் கணக்கான உயிர்களின் நம்பகத்தன்மையே இதற்கு காரணமாகும். 

செலிங்கோ லைஃப் நிறுவனமானது மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்கு காப்புறுதிதாரர்களுக்கு நிகர உரிமைகோரல்கள் மற்றும் சலுகைகளாக ரூ. 15.14 பில்லியனை செலுத்தியுள்ளது, இது முந்தைய ஆண்டின் முதல் அரையாண்டினை விட 8.3 சதவீதம் அதிகமாகும். ஆறு மாதங்களில் நிறுவனமானது வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 3.1 பில்லியனையும், நிகர லாபமாக ரூ. 2.08 பில்லியனையும் ஈட்டியுள்ளது. 

முக்கிய நிதிவிகிதங்களை நோக்கும்போது, செலிங்கோ லைஃப்பின் ஆறு மாதங்களுக்கான பங்கொன்றின் அடிப்படை வருமானம் ரூ. 41.63 ஆகவும், நிகர சொத்து பெறுமதி ரூ. 1,238.87 ஆகவும், பதிவு செய்யப்பட்டதுடன் ஜூன் 30, 2025 அன்று பங்கொன்றிற்கான நிகர சொத்து பெறுமதி ரூ. 1,238.87 ஆக பதிவான நிலையில் இது 9.1 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. செலிங்கோ லைஃப் புதுமையான ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை வழங்குகிறது, இது நிறுவனத்தின் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளை ஆபத்திலிருந்து விடுவித்து பாதுகாப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிராண்ட் ஃபினான்ஸால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தகநாமமாகவும், ஒட்டுமொத்தமாக நாட்டின் 22வது மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமமாகவும் இந்த நிறுவனம் தரவரிசைப்படுத்தப்பட்டது, மேலும் 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19வது ஆண்டாக ஆண்டின் மக்கள் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராகவும் வாக்களிக்கப்பட்டது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தகநாமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட செலிங்கோ லைஃப், 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் சர்வதேச வர்த்தகசபை (ICCSL) மற்றும் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம் (CIMA) ஆகியவற்றால் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05