வணிகம்
வெளிநாட்டு கல்விக்கான அணுகலை விரிவுபடுத்த கொமர்ஷல் வங்கி, Lead Pro Education உடன் இணைகிறது

Sep 3, 2025 - 12:41 PM -

0

வெளிநாட்டு கல்விக்கான அணுகலை விரிவுபடுத்த கொமர்ஷல் வங்கி, Lead Pro Education உடன் இணைகிறது

கொமர்ஷல் வங்கியானது வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடரத் திட்டமிடும் மாணவர்களுக்கு நியாயமான விலையில் நிதியியல் தீர்வுகளை வழங்குவதற்காக, லீட் புரோ எடியூகேஷன் கன்சல்டன்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Lead Pro Education Consultants (Pvt) Ltd) உடன் பங்குடமையை மேற்கொண்டுள்ளது. 

இதற்கிணங்க இரண்டு நிறுவனங்களும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதன் மூலம் தமது ஒத்துழைப்பினை முறைப்படுத்தியுள்ளன. இதன் கீழ் மாணவர்கள் விரிவான கல்விக் கடன் வசதி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட ஏனைய வங்கி வசதிகளின் மூலம் பயனடையவுள்ளனர். 

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாரிய வலையமைப்புடன் இணைப்புகளைப் பராமரிக்கும் லீட் புரோ எடியூகேஷன் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம், இந்த நாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சி சேவைகளை வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சிகளுக்கு லீட் புரோவை நாடும் மாணவர்கள் கொமர்ஷல் வங்கியில் ஒரு மாணவர் கோப்பைத் திறந்து வெளிநாட்டு கல்விக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கடன்களைப் பெறலாம். 

இந்தத் திட்டத்தின் கீழ் மொத்த பாடநெறி கட்டணத்தில் 75% வரை கல்விக் கடனாக பெற முடிவதுடன் ஒரு விண்ணப்பதாரருக்கு அதிகபட்சமாக ரூ.10 மில்லியன் வரை வங்கியினால் நிதியளிக்க முடியும். அத்துடன் கடன் பெறுபவர்கள் மீளச்செலுத்தத் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சலுகை காலம் வழங்கப்படுவதால் இது கல்வி கற்கும் காலத்தில் அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கிறது. மேலதிகமாக, ஆவணக் கட்டணங்களில் 50% குறைப்பு மற்றும் முதல் தந்தி பரிமாற்றக் கட்டணமான ரூ.7,500 இல் 50% விலைக்கழிவினைப் பெறுவார்கள். இது அவர்களின் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான செலவை மேலும் குறைக்கும். 

உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகத் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05