Sep 3, 2025 - 12:43 PM -
0
பாகிஸ்தானில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயமடைந்துள்ளனர்.
தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் மறைந்த தேசியவாத தலைவர் சர்தார் அத்தாவுல்லா மெங்கல்-லின் நினைவு தினத்தை முன்னிட்டு பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.
பேரணி முடிந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது, மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பேரணியில் கலந்து கொண்ட அத்தாவுல்லா மெங்கல்-லின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.