Sep 3, 2025 - 01:01 PM
2 கிலோ 755 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் மொரகந்த கொடவெவ அருகே சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























