செய்திகள்
புகையிரதத்துடன் மோதி பெண் உயிரிழப்பு

Sep 3, 2025 - 01:32 PM -

0

புகையிரதத்துடன் மோதி பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (03) புதன்கிழமை பயணித்த புகையிரதத்துடன், கொடிகாம பகுதியில் மோதி உயிரிழந்துள்ளார். 

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05