செய்திகள்
மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Sep 3, 2025 - 01:58 PM -

0

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த துப்பாக்கிச் சூடு இன்று (03) காலை T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கார் உதிரி பாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இந்த சம்பவம் குறித்து மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டுடன், இந்த ஆண்டில் 93 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், 49 பேர் இறந்துள்ளனர் மற்றும் 54 பேர் காயமடைந்துள்ளனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05