கிழக்கு
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Sep 3, 2025 - 02:03 PM -

0

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடு ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து, உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளளது. 

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று (03) மதியம் இவ்வாறு அழுகிய நிலையில் உருக்குலைந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 15 நாட்களாக காணாமல் சென்றிருந்த நிலையில், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவரை கடந்த 15 நாட்களாக உறவினர்கள் தேடி வந்ததுடன், குறித்த நபர் சம்மாந்துறை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 55 வயது மதிக்கத்தக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மனநிலை பாதிக்ககப்பட்ட இவர் சகோதரி ஒருவரின வீட்டில் தங்கி இருந்த நிலையில் காணாமல் சென்றிருந்ததாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05