Sep 3, 2025 - 02:40 PM -
0
சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் டெய்லர், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருடன் மீண்டும் சர்வதேச டி-20 அணிக்குத் திரும்புகின்றார்.
2021ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இன்று (3) இடம்பெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெய்லர், 2022 ஆம் ஆண்டு ஊழல் அணுகுமுறையைப் முறைப்பாடளிக்க தவறியதற்காக மூன்றரை ஆண்டுகள் தடை செய்யப்பட்டார்.
தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் பிரெண்டன் டெய்லர் சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார்.
இந்தநிலையில் இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் அவர் மீண்டும் தேசிய அணிக்குள் திரும்புவது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

