Header Logo
SLIC
சினிமா
1,200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம்!

Sep 3, 2025 - 10:23 PM

 1,200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம்!
Mobitel Inner 1278
EDEX Inner

தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக ராஜமௌலி வலம் வருகிறார். இவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியாகி வசூலில் ஆயிரம் கோடிகளை தாண்டியது. இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் (சுமார் 500 கோடி ரூபாயை தாண்டி) எடுக்கப்பட்டது. 

தற்போது ராஜமௌலி தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பெயர் வைக்கப்படாததால் SSMB29 என அழைக்கப்பட்டு வருகிறது. 

பிரமாண்ட இயக்குனர், முன்னணி கதாநாயகன் இணைவதால், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் என்பதால் இரண்டு பகுதியாக வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்து வந்தது. 

இந்த நிலையில், இப்படம் சுமார் 1,200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது இரண்டு பாகமாக எடுக்கப்பட இருக்கிறது. 120 நாடுகளில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டால், தெலுங்கு சினிமா வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைக்கும். 

படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்தார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமார் மற்றும் பல முன்னணி நகடிர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278