Sep 3, 2025 - 04:20 PM -
0
'பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருடன் இணைந்து அவரது மகள் சுஹானா கான் நடிக்கிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான பொலிஸ் புகாரில் நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலிபாக்கில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை விவசாயத்திற்காக வாங்குவதாக பத்திரப்பதிவின் போது கூறிவிட்டு பண்ணை இல்லம் கட்டியதாக சுஹானா கான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

