Header Logo
SLIC
செய்திகள்
தபாலில் வந்த 312 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்

Sep 3, 2025 - 05:24 PM

தபாலில் வந்த 312 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்
Mobitel Inner 1278
EDEX Inner

சீதுவையில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் விமான தபால் மூலம் பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதிகளில் 312 மில்லியன் ரூபாய் (312,000,000) பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழு இன்று (03) மதியம் முன்னெடுத்த சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதில் 23,642 போதை மாத்திரைகள், 01 கிலோகிராம் 445 கிராம் அளவிலான கொக்கைன், 993 கிராம் மெண்டி மற்றும் 98 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் ஆகியவை அடங்குகின்றன. 

இவை ஜெர்மனி, செக் குடியரசு, சம்பியா, அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு, பாணந்துறை, வத்தளை, ராஜகிரிய மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களில் உள்ள போலி முகவரிகளுக்கு 07 பொதிகள் அனுப்பப்பட்டிருந்தன. 

சம்பந்தப்பட்ட பொதிகளை பொறுப்பேற்க யாரும் வராமையினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது அந்த பொதிகளில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து முகவரிகளும் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278