Sep 4, 2025 - 12:59 PM -
0
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் 53 மாணவர்களை சித்திபெற செய்து ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரி மற்றுமொரு சாதனையினை படைத்துள்ளதாக அக்கல்லூரியின் அதிபர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவத்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரியிலிருந்து 101 மாணவர்கள் இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியதாகவும், அதில் 53 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளதாகவும், 70 புள்ளிகளுக்கு மேல் 99 சதவீத மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் இது ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி, இதற்காக உழைத்த ஆரம்ப பிரிவு பிரதி அதிபர் சுகுமார் உட்பட ஆசிரியர்கள், பகுதி தலைவர்கள் உட்பட கல்வி புலமை சார்ந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
--

