Sep 4, 2025 - 01:25 PM -
0
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை அப்பதவியில் இருந்து நீக்கி, சுகாதார அமைச்சகத்துடன் இணைப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்டிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தத்தை இன்று நண்பகல் 12 மணி முதல் நிறைவு செய்வதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.