Sep 5, 2025 - 09:28 AM -
0
எல்ல - வெல்லவாய வீதியில் 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் நேற்று (04) இரவு நடந்த பேருந்து விபத்தில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
அத்துடன் இறந்தவர்களில் இரண்டு சிறு பிள்ளைகளும் பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பதுளை போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த சுமார் 500 அடி பள்ளத்தில் பேருந்து கிடக்கும் இடத்தை அத தெரண செய்தியாளர் விதர்ஷன பெர்னாண்டோ அடைந்துள்ளார்.
இதன்போது பதிவு செய்யப்பட்ட பிரத்யேக காட்சிகள் கீழே...