ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (05.09.2025)

Sep 5, 2025 - 10:48 AM -

0

இன்றைய ராசிப்பலன் (05.09.2025)

இன்று (05) மகரத்தில் சந்திரன் இருக்கிறார். மகாவிஷ்ணுவின் நல்லருள் நிறைந்திருக்கும் இன்று மிதுன ராசியில் உள்ள திருவாதிரை பின்பு புனர்பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று கலவையான பலன்களை பெறுவார்கள். வியாபாரத்தில் இருக்கும் மந்தநிலையால் கவலை ஏற்படும். இன்று உங்கள் குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எதையாவது பகிர்ந்து கொள்வதற்கும் முன் அல்லது சொல்வதற்கு முன் சிந்தித்து பேசவும். இன்றைய சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த தொந்தரவுகள் குறையும். யாரிடமும் உரத்த குரலில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களின் செயல்பாடுகள் புகழ் அதிகரிக்கும். இன்று உங்களின் பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதன் காரணமாக வீட்டிலும் பணியிடத்திலும் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அரசாங்கம் தொடர்பான வேலைகளை கவனமாக செய்து முடிக்கவும். உங்கள் நண்பர்களிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். பொதுநல பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று வணிகம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். இது தொடர்பாக சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. 

மிதுன ராசி பலன் 

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு தைரியமும் தைரியமும் அதிகரிக்க கூடிய நாள். உங்கள் துணையுடன் ஷாப்பிங் செல்ல வாய்ப்பு உண்டு. எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். இன்று பணியிடத்தில் உங்களின் தகுதிக்கேற்ப வேலை கிடைப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வேலைகளில் எதிர்பார்க்கும் இடம் மாற்றும் கிடைக்கும். உங்கள் பேச்சில் மென்மையை கடைப்பிடிப்பது மரியாதையை பெற்று தரும். இன்று உங்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் கடனை பெருமளவில் அடக்க முடியும். 

கடக ராசி பலன் 

கடக ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று சிறப்பாக சாதனைகளை படைக்க முடியும். புதிய வேலையை தொடங்க நினைப்பவர்களுக்கு காரணமான சூழல் நிலவும். பணியிடத்தில் நிலவுக்குரிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்களின் எதிரிகளை எளிதாக வெல்ல முடியும். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பதோடு, எந்த ஒரு வதந்திகளையும் நம்ப வேண்டாம். உங்கள் வேலையில் பணி சுமையை நிறைந்திருக்கும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். 

சிம்ம ராசி பலன் 

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு கலவையான பலன்களை கிடைக்கும். திடீர் லாபங்கள் உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய முதலீடு செய்யும் விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று தான தர்மங்களில் உற்சாகத்துடன் மங்கேற்பார்கள். உங்களின் தாராளமான மனப்பான்மை வெளிப்படும். வருமானம் சிறப்பாக இருந்தாலும் அது சரியான விதத்தில் சேமிக்க முயற்சி செய்யவும். உங்கள் உறவினர்களிடம் சண்டை இடுவதை தவிர்க்கவும். வணிகம் செய்யக்கூடியவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையில் சிறப்பாக செயல்படுகிறது. அதனால் மேலதிகாரிகளின் பாராட்டு, வெகுமதி கிடைக்கும். சிலர் ஆன்மீக பயணம் செல்ல திட்டமிடுவார்கள். உங்களின் சிறப்பான வேலை காரணமாக எதிரிகளை வெல்ல முடியும். உங்களின் மனதில் உறுதி அதிகரிக்கும். தங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவார்கள். இன்று உங்கள் வேலையில் மன அழுத்தம் நீங்கும். வேலையை சரியாக செய்து முடிக்க முடியும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசிக்கு எந்த வருடம் முக்கியமான விவாதங்களில் பங்கிற்கு வாய்ப்பு கிடைக்கும். உங்களின் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று உங்கள் வீட்டில் பராமரிப்பது தொடர்பாக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். சிலருக்கு வேலை, படிப்பு தொடர்பாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை இருக்கும். இன்று சில தேவை இல்லாத மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். சொத்து தொடர்பான சர்ச்சையில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. 

விருச்சிக ராசி பலன் 

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். தனிப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக செய்து முடிக்கவும். வணிகம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் பெரிய முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் உயிர்களை தொடர்பான முயற்சிகளில் வெற்றி அடைவார்கள்.இன்று உங்கள் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற வாய்ப்பு உண்டு. சரியான திட்டமிடல் நல்ல பலனைத் தரும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று கொஞ்சம் பலவீனமாக உணர்வீர்கள். இன்று ஆபத்தான எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். இன்று வேலை தொடர்பாக திடீர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. இன்று நண்பர்களின் ஆலோசனைகளை கண்மூடித்தனமாகச் செயல்படுத்த வேண்டாம். இன்று சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வேலைகளை செய்து முடிப்பதிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். சிரமங்களில் இருந்து விடுபட வாய்ப்புகள் உண்டு. 

மகரம் ராசி பலன் 

மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று சில நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் பெருமைகள். உண்டு திருமண வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும். நண்பர்களுடன் எந்த ஒரு தகராறிலும் ஈடுபட வேண்டாம். உடல் நலம் தொடர்பாக மிகவும் கவனத்துடன் இருக்கவும். சில பெரிய உடல்நல பிரச்சினை எதிர்கொள்ள நேரிடும். நம் முக்கிய எதிர்ப்பார்த்த நேரத்தில் முடிக்க முடியாமல். வண்டி, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். போட்டி தேர்வு தயாராக கூடிய நபர்கள் அதில் வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும். 

கும்ப ராசி பலன் 

கும்ப ராசி சேர்ந்தவர்கள் இன்று எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும், பிறர் சொல்வதை கவனமாக ஆராய்வதோடு, கண் மூடித்தனமாக செயல்பட வேண்டாம். இன்று எந்த விஷயத்திற்காகவும் கடன் வாங்குவதை தவிர்க்கவும் பிறரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று எந்த ஒரு வேலையை செய்வதில்லை முடிவுகளை எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். சிலருக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 

மீன ராசி பலன் 

மீன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று அதனை வேலையில் வேகத்தை காண்பார்கள்.இன்று மாணவர்கள் பணிக்கு ஆர்வம் காட்டுவார்கள். முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். இன்று உங்களின் புத்திசாலித்தனத்தால் எதிர்களை எளிதாக தோற்கடிக்க முடியும். தாய் வழி சொந்தங்கள் மூலம் நிதி நன்மை கிடைக்கும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து செயல்படுவோம். இன்று சொத்து தொடர்பாக சில மோசமான செய்திகள் கிடைக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05