Sep 5, 2025 - 12:00 PM -
0
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா 187 புள்ளிகளை பெற்று கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகூடிய மதிப்பெண்களை பெற்ற மாணவியாக சாதனை படைத்து கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவட்டவான், செறுவாமுனை கிராமத்தில் வசிக்கும் பிறைசூடி (அபிவிருந்தா உத்தியோகத்தர்) கிரிஜா ஆகியோரின் புதல்வியே இந்த சாதனையினை படைத்துள்ளார்.
நேற்று (04) காலை பாடசாலைக்கு சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குறித்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார்.
அத்துடன் நாவற்காடு கனிஷ்ட வித்தியாலயத்தில் ஏழு மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த நிலையில் ஏனைய மாணவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
--