Sep 5, 2025 - 02:07 PM -
0
கடந்த வருடம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இன்று (05) ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியாகிவிட்டது.
சிவகார்த்திகேயன் - முருகதாஸ் முதன்முறையாக கூட்டணி அமைத்திருப்பதால் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
டிக்கெட் புக்கிங்கிலும் நல்ல கலெகஷ்ன் பெற்ற மதராஸி திரைப்படம் முதல்நாள் எவ்வளவு வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் முதல்நாளில் மொத்தமாக ரூபா 18 கோடி வரை வசூலிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

