Sep 5, 2025 - 03:40 PM -
0
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் இங்கிலாந்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன்.
இது அனைவருக்கும் ஒரு பாடம். உதாரணமாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு இது ஒரு பெரிய பாடம்.
ட்ரம்பை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒரு நல்ல தனிப்பட்ட உறவு சில சமயங்களில் உதவக்கூடும். ஆனால் அது உங்களை மோசமானவற்றில் இருந்து பாதுகாக்காது.
அரசு உறவு வேறு, ராஜாங்க உறவு வேறு. தனிப்பட்ட நட்பு என்பது வேறு. அதனால் தான் அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் சர்வதேச உறவுகளை தலைவர்களுடனான தனது தனிப்பட்ட உறவுகளின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என நினைக்கிறேன். எனவே அவருக்கு விளாடிமிர் புதினுடன் நல்ல உறவு இருந்தால் அமெரிக்காவுக்கு ரஷியாவுடன் நல்ல உறவு இருக்கிறது என அவர் கருதுகிறார்.
ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி பேரணி முதல் அரசு வருகைகள் வரை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த மோடி - ட்ரம்ப் இடையிலான உறவுகள் இப்போது மோசமாகி உள்ளது. இரு நாட்டு உறவு மோசமான நிலையை அடைந்துள்ளது என தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நீடித்து வரும் சூழ்நிலையில், ஜான் பால்டன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

