வடக்கு
நம்பி வாக்களித்தவர்கள் மக்களுக்கு எவற்றையும் செய்யவில்லை!

Sep 5, 2025 - 05:49 PM -

0

நம்பி வாக்களித்தவர்கள் மக்களுக்கு எவற்றையும் செய்யவில்லை!


தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றி மக்கள் ஆதரவு மேலும் அதிகரிக்க அதனை பொறுக்க முடியாத தேர்தலில் தோல்வியுற்ற வடக்கு தெற்கு அரசியல்வாதிகள் ஒன்றிணைகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். 

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகளாக மக்கள் நம்பி நம்பி வாக்களித்தவர்கள் மக்களுக்கு எவற்றையும் செய்யவில்லை தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர்.அவர்களே இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர். 

டக்ளஸ் தேவானந்தாவும் வீட்டுக்கட்சியும் ஒன்று சேர்வார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை இன்று பேசுபொருளாக இருப்பது செம்மணி இதற்கு எமது அரசாங்கம் சரியான விசாரணைகளை நடாத்தி தீர்வை பெற்றுக்கொடுக்கும் கடந்த அரசாங்கங்கள் இவ்வாறு புதைகுழிகளை இனங்கண்டு விட்டு அதனை மூடி மறைப்பார்கள் அப்பொழுது எல்லாம் கொந்தளிக்காதவர்கள் எமது அரசாங்கம் நீதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கும் போது கொந்தளிக்கின்றனர். 

எந்த அரசாங்களும் மீட்கப்பட்ட உடல் உட்பட அனைத்து தடயப்பொருட்களையும் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் காட்டியிருக்கின்றனரா. 

நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக இவர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்று இருந்தபோது நீதியை பெற்றுக்கொடுக்காதவர்கள் இப்பொழுது பெற்றுக்கொடுப்பார்களா என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05