Sep 6, 2025 - 08:54 AM -
0
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள "சட்டப்படி வேலை செய்யும்" தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
எந்தவொரு ஊழியரும் தன்னார்வ ஓய்வு திட்டத்திற்கு உடன்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.
"முதற்கட்டமாக, சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை செப்டம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்முறைகள் காரணமாக இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டது.நேற்று அமைச்சருடன் இது குறித்து கலந்துரையாடினோம். ஆனால், இதன்போது திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை," என்று அவர் கூறினார்.